தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

National Green Tribunal: எண்ணூர் அனல்மின் நிலையம்: கருத்துக் கேட்புக் கூட்டத்திற்கு தடை விதிக்க பசுமை தீர்ப்பாயம் மறுப்பு - கருத்துக் கேட்புக் கூட்டத்திற்கு தடை விதிக்க பசுமை தீர்ப்பாயம் மறுப்பு

National Green Tribunal: எண்ணூரில் அமைக்கப்பட்டு வரும் அனல்மின் நிலையத்தின் சுற்றுச்சூழல் அனுமதியை நீட்டிப்பது தொடர்பாக நடைபெறவுள்ள பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டத்திற்கு தடை விதிக்க பசுமை தீர்ப்பாயம் மறுத்துவிட்டது.

பசுமை தீர்ப்பாயம் மறுப்பு
பசுமை தீர்ப்பாயம் மறுப்பு

By

Published : Jan 6, 2022, 8:06 AM IST

National Green Tribunal: சென்னை எண்ணூரில் 40 ஆண்டுகளாக இயங்கிவந்த 450 மெகாவாட் அனல்மின் நிலையம் காலாவதியாகி கடந்த 2017ஆம் ஆண்டு மூடப்பட்டது. அதற்கு மாற்றாக, 660 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட அனல் மின் நிலையம் அமைக்க, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம், 2009-ம் ஆண்டு ஒன்றிய சுற்றுச்சூழல் துறையிடமிருந்து சுற்றுச்சூழல் அனுமதி பெற்றது.

இந்த அனல் மின்நிலையம் அமைக்கும் பணிகள் நடந்து வரும் நிலையில், 10 ஆண்டுகளை கடந்துவிட்டதால், சுற்றுச்சூழல் அனுமதியை மேலும் நான்கு ஆண்டுகள் நீட்டிக்கும்படி, ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்ற ஒன்றிய அரசு, கருத்து கேட்பு கூட்டம் நடத்துவதில் இருந்து விலக்கு அளித்து புதிய சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கியது.

கருத்து கேட்பு கூட்டம்

இதனை எதிர்த்து ஆர்.எல்.சீனிவாசன் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம், இரண்டு மாதத்தில் மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்த உத்தரவிட்டது.

அதன்படி, நாளை (ஜனவரி 6) எண்ணூரில் மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள வேண்டி உள்ளதாகவும், கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்த தடைவிதிக்க கோரி சீனிவாசன் மீண்டும் பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.

கரோனா பரவல்

இந்த வழக்கு நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன் மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் டி.சண்முகநாதன், கரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அனைவரையும் ஒரே நேரத்தில் அனுமதிக்காமல், நூறு நூறு நபர்கள் கொண்ட ஸ்லாட் முறையில் நடத்தலாம் என்றும் தெரிவித்தார்.

தடை விதிக்க மறுப்பு

மேலும் கருத்து கேட்பு கூட்டத்தை எதிர்த்து பசுமை தீர்ப்பாயத்தை நாட முடியாது எனவும் வாதிடப்பட்டது. பின்னர் உத்தரவிட்ட பசுமை தீர்ப்பாய அமர்வு, கருத்து கேட்பு கூட்டத்தை நடத்துவதா, தள்ளிவைப்பதா என்பது குறித்து மாவட்ட ஆட்சியரும், மாசு கட்டுப்பாட்டு வாரியமும்தான் முடிவெடுக்க வேண்டுமெனவும், தீர்ப்பாயம் தலையிட்டு உத்தரவிட முடியாது என கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க:"கல்லூரிகளில் நேரடித் தேர்வு முறையே தொடர வாய்ப்பு!" - அமைச்சர் பொன்முடி

ABOUT THE AUTHOR

...view details