சேலம் மாவட்ட.த்தில் ஆறு வயது முதல் 16 வயது வரை உள்ள காது கேளாத மற்றும் பார்வையற்ற அரசு பள்ளி மாணவர்கள் 30 பேர் இன்று சேலத்தில் இருந்து சென்னை வரை விமானப் பயனம் மேற்கொண்டனர். உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தனியார் தொண்டு நிறுவனம் மற்றும் ட்ரூஜெட் ஏர்லைன்ஸ் ஆகியோர் இணைந்து இந்த விமான பயணத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கின்றனர்.
கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் சர்வேதச மாற்றுத்திறனாளிகள் தினவிழாவில் பங்கேற்பதற்காக அழைத்து வரப்பட்ட இம்மாணவர்களை சென்னை விமான நிலையத்தில், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணை இயக்குனர் அரவிந்த் சிங்பூ மற்றும் ட்ரூஜெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அலுவலர்கள் பூங்கொத்து கொடுத்தும் இனிப்புகளை வழங்கியும் வரவேற்றனர்.
ஏழை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விமான பயணத்தை ஏற்படுத்தி கொடுத்த தொண்டு நிறுவனம் பின்னர், நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு மாநகரப் பேருந்து மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர். விமானப் பயணம் குறித்து பேசிய மாணவர்கள், சர்வேதச மாற்றுத் திறனாளிகள் தினத்தில் விமானத்தில் முதல் முறையாக பயணம் செய்தது மிகவும் மகிழ்ச்சியாகவும் ஆச்சர்யம் தரக்கூடியதாகவும் இருந்ததாக தெரிவித்தனர்.
குழந்தைகளுக்கு விமானத்தில் பயணம் செய்வதென்பது அலாதியான மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம்தான். அத்தகைய மகிழ்ச்சியை மாணவர்களுக்கு ஏற்படுத்தி கொடுத்த தொண்டு நிறுவனத்திற்கும் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கும் பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: மாற்றுத் திறனாளிகளுக்கு சிறந்த சேவை: தருமபுரி ஆட்சியர் மலர்விழிக்கு குடியரசு துணைத் தலைவர் விருது!