வளிமண்டல மேலடுக்குச் சுழற்சிக் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்றிலிருந்து அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது.
குறிப்பாக, விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர், கடலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நாகப்பட்டினம், தருமபுரி, சேலம், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட பதினேழு மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. குமரிக்கடல், மாலத்தீவு கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீசுமென்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.