தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அச்சு ஊடகங்கள் சந்திக்கும் நெருக்கடிகள்: மாநில பாஜக தலைவரிடம் மனு - ‘கல்’ பப்ளிகேஷன்ஸ் (தினகரன்) மேலாண் இயக்குநர்

சென்னை: ஊரடங்கினால் அச்சு ஊடகங்கள் சந்தித்துவரும் நெருக்கடிகளைக் களைய உதவுமாறு தமிழ்நாடு மாநில பாஜக தலைவரிடம் செய்தித்தாள் நிறுவனத்தினர் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Newspaper Companies given petition to tamilnadu bjp leader
Newspaper Companies given petition to tamilnadu bjp leader

By

Published : May 23, 2020, 10:44 AM IST

கரோனா அச்சுறுத்தல் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கினால் அச்சு ஊடகங்கள் பெருமளவில் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன. இதனைக் கருத்தில்கொண்டு தங்களுக்கு உதவுமாறு செய்தித்தாள் நிறுவனத்தினர் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்து கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதையடுத்து, ‘தி இந்து’ குழும இயக்குநர் என். ராம், ‘கல்’ பப்ளிகேஷன்ஸ் (தினகரன்) மேலாண் இயக்குநர் ஆர்.எம்.ஆர். ரமேஷ், கோவை தினமலர் பதிப்பாளர் எல். ஆதிமூலம் ஆகியோர் தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் எல். முருகனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில்,

  1. மத்திய அரசு அச்சு காகிதத்திற்கான சுங்கவரியை ரத்துசெய்ய வேண்டும்,
  2. மத்திய, மாநில அரசுகளின் விளம்பர நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும்,
  3. அரசு விளம்பரங்களுக்கான கட்டணத்தை 100 விழுக்காடு உயர்த்த வேண்டும்

என்பன உள்ளிட்ட அச்சு ஊடகத்தினரின் கோரிக்கைகள் இடம்பெற்றிருந்தன.

மாநில பாஜக தலைவரிடம் கலந்துரையாடிய செய்தித்தாள் நிறுவனத்தினர்

பின்னர், ஊரடங்கு காலத்தில் அச்சு ஊடகத்தினர் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்தும் கலந்துரையாடினர். இதையடுத்து, அச்சு ஊடகங்களின் இந்தக் கோரிக்கை மனு குறித்து பிரதமர் மோடியிடம் தெரிவிப்பதாக பாஜக மாநிலத் தலைவர் உறுதியளித்தார்.

இதையும் படிங்க: அச்சு, மின்னணு இணைய ஊடகவியலாளர்களுக்கு செய்தி ஒலிபரப்பு அமைச்சகம் அறிவுரை!

ABOUT THE AUTHOR

...view details