ஈடிவி பாரத்தின் இன்றைய செய்திகள் நிகழ்வுகளின் தொகுப்பு
தேசிய வாக்களர் தினம்
11ஆவது தேசிய வாக்காளர் தினம் இந்திய தேர்தல் ஆணையத்தால் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
வாக்காளர்களை அதிகாரமிக்கவர்களாகவும், விழிப்புணர்வு மிக்கவர்களாகவும், பாதுகாப்பு மற்றும் தகவல் அறிந்தவர்களாகவும் ஆக்குவதே இந்தாண்டு தேசிய வாக்காளர் தினத்தின் கருப்பொருள். இதற்காக டெல்லியில் நடைபெறும் விழாவில் குடியரசு தலைவர் சிறப்பு விருந்தினராக காணொளி வாயிலாக கலந்து கொள்கிறார்.
மொழிப்போர் தியாகிகள் தினம் முதலமைச்சர் பங்கேற்பு
தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி 25ஆம் நாள் மொழிப்போர் தியாகிகள் தினமாக அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகள் கடைபிடிக்கின்றன. அந்த வகையில் இன்று கள்ளக்குறிச்சியில் அதிமுக சார்பில் நடக்கும் மொழிப்போர் தியாகிகள் தினக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் கலந்துகொள்ளகிறார்.
மொழிப்போர் தியாகிகள் தினம் பரப்புரை முடித்து டெல்லி திரும்புகிறார் ராகுல்
தமிழ்நாட்டில் மூன்று நாட்கள் தேர்தல் பரப்புரைக்காக வந்த காங்கிரஸ் எம்பி ராகுல் மூன்றாம் நாளாக இன்று கரூர், திண்டுக்கலில் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தொடர்ந்து இரவு மதுரையிலிருந்து டெல்லி திரும்புகிறார்.
பரப்புரை முடித்து டெல்லி திரும்புகிறார் ராகுல் கோபாலபுரத்திலிருந்து மக்களுடன் உரையாடும் ஸ்டாலின்
மக்கள் கிராம சபைக் கூட்டம் மூலமாக மக்களைச் சந்தித்து வந்த எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று கோபாலபுரம் இல்லத்திலிருந்து மக்களுடன் உரையாடுகிறார்.
மக்களுடன் உரையாடும் ஸ்டாலின் கமல்ஹாசன் செய்தியாளர் சந்திப்பு
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்காக சீரமைப்போம் தமிழகத்தை என்று பரப்புரை செய்து வரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கமல்ஹாசன், தனது தேர்தல் வாக்குறுதிகளின் தொடர்ச்சியாக ' உள்ளாட்சி செயல்பாட்டுத் திட்டங்கள் குறித்து இன்று பகல் 11 மணிக்கு பத்திரிக்கையாளர்களைச் சந்திக்கிறார்.
கமல்ஹாசன் செய்தியாளர் சந்திப்பு டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்
சென்னை பெருநகரில் குடிநீர் வழங்கி வந்த டேங்கர் லாரி உரிமையாளர்கள், புதிய ஒப்பந்த ஆணையை வழங்க வலியுறுத்தி, இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இந்த நிலையில், இன்று காலை 10 மணிக்கு மீண்டும் பேச்சு வார்த்தை நடக்கிறது.
டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் பள்ளி திறப்பது குறித்து கல்வித்துறை அலுவலர்கள் ஆலோசனை
கரோனா பொது முடக்கத்தால் கடந்த ஆண்டு முழுவதும் பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த 19 ஆம் தேதி 10, 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்த நிலையில், அடுத்ததாக 9, 11 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து கல்வித்துறை அலுவலர்கள் ஆலோசனை நடத்துகின்றனர்.
பள்ளித்திறப்பது குறித்து கல்வித்துறை அலுவலர்கள் ஆலோசனை