தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈடிவி பாரத்தின் இன்றைய செய்திகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்பு #ETVBharatNewsToday

இன்றைய (டிச. 13) செய்திகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகளைச் சுருக்கமாக காணலாம்.

NEWS TODAY
NEWS TODAY

By

Published : Dec 13, 2020, 6:45 AM IST

'சீரமைப்போம் தமிழகத்தை' என்ற பெயரில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் பரப்புரையை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மதுரையிலிருந்து இன்று தொடங்குகிறார்.

கமல்ஹாசன் முதல்கட்ட தேர்தல் பரப்புரை

தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமையில் இன்று நடைபெறுகிறது. இதில், சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

வாக்காளர்கள் பெயர் சேர்க்க, நீக்க, திருத்த ஏதுவாகத் தமிழ்நாடு முழுவதும் இரண்டாம்கட்ட வாக்காளர் சரிபார்ப்பு சிறப்பு முகாம் இன்று நடைபெறுகிறது.

வாக்காளர் சரிபார்ப்பு சிறப்பு முகாம்

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வுக் குழுமம் நடத்தும், இரண்டாம் நிலைக் காவலா் தோ்வுக்கான எழுத்துத் தோ்வு மாநிலம் முழுவதும் இன்று நடைபெறுகிறது. இந்தத் தோ்வை சுமார் 5.5 லட்சம் போ் எழுதுகின்றனா்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு

ஆஸ்திரேலியா பிக் பேஷ் டி-20 தொடரின் இன்றையப் போட்டியில், அடிலைட் ஸ்டைக்கர்ஸ் அணியும் ஹோபார்ட் ஹரிகன்ஸ் அணியும் மோதுகின்றன.

ஆஸ்திரேலியா பிக் பேஷ் டி-20

ABOUT THE AUTHOR

...view details