தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈடிவி பாரத்தின் இன்றைய செய்திகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்பு #ETVBharatNewsToday - நிகழ்வுகளின் தொகுப்பு

இன்றைய (டிச. 10) செய்திகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகளைச் சுருக்கமாக காணலாம்.

NEWS TODAY
NEWS TODAY

By

Published : Dec 10, 2020, 6:39 AM IST

டெல்லியில் ரூ.971 கோடி செலவில் கட்டப்படவுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். வரும் 2022ஆம் ஆண்டில் நாட்டின் 75ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதற்கு முன் இந்தப் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை எழுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

புதிய நாடாளுமன்றக் கட்டடம்

2.தேனியில் ரூ.265 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார். தமிழ்நாட்டின் 6ஆவது கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தேனி மாவட்டம் வீரபாண்டியில் அமைய உள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

3.மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இன்று (டிச. 10) மாணவர்களுடன் காணொலி வாயிலாக கலந்துரையாட உள்ளார்.

மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

4.வடகிழக்குப் பருவமழை காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடியுடன்கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம்

5.ஆஸ்திரேலியா பிக் பேஷ் லீக் டி-20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. ஹோபர்ட் ஓவல் மைதானத்தில் நடைபெறும் முதல் தொடரின் முதல் போட்டியில், ஹோபர்ட் ஹரிக்கன்ஸ் அணியும் சிட்னி சிக்சர்ஸ் அணியும் மோதுகின்றன.

பிக் பேஷ் லீக் டி-20 கிரிக்கெட் தொடர்

ABOUT THE AUTHOR

...view details