மூன்றாவது தடுப்பூசி முகாம்
தமிழ்நாடு முழுவதும் இன்று 20 ஆயிரம் தடுப்பூசி முகாம்கள் மூலம் 15 லட்சம் கரோனா தடுப்பூசிகள் செலுத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கரையை கடக்கும் குலாப் புயல்
கிழக்கு மத்திய வங்கக் கடலில் உருவான குலாப் புயல் இன்று மாலை விசாகப்பட்டினம் - கோபால்பூர் இடையே கரையே கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
மீண்டும் வெளியாகும் தி ரைசிங் சன்
திமுக அரசின் செயல்பாடுகளை பிற மாநிலத்தவர், வெளிநாட்டினர் அறிந்து கொள்ளும் வகையில், அக்கட்சியின் அதிகாரப்பூர்வ ஆங்கில நாளேடான 'தி ரைசிங் சன்'-ஐ இன்று மாலை அண்ணா அறிவாலாயத்தில் முதலமைச்சரும்திமுக தலைவருமான ஸ்டாலின் வெளியிடுகிறார்.
ஜெர்மனியில் தேர்தல்
ஜெர்மனியில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தல் பிரதமர் ஏஞ்சலா மெர்கலின் 16 ஆண்டு கால அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என கருத்து கணிப்புகள் கூறுகின்றன.
இன்றையப் போட்டிகள்
ஐபிஎல் தொடரில் இன்று (செப். 26) இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. தொடரின் 38ஆவது லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மதியம் 3.30 மணிக்கு தொடங்குகிறது. மும்பை இந்தியன்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் அணியை சந்திக்கும் மற்றொரு லீக் போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.