1. நாட்டின் முதன்மையான விண்வெளி மற்றும் பாதுகாப்பு கண்காட்சியான ஏரோ இந்தியா 2021 இன்று கர்நாடக மாநிலம் யெலஹங்காவில் நடைபெறுகிறது. இயற்பியல், மெய்நிகர் கண்காட்சியின் கலவையுடன் நடைபெறும் இதில் 'இந்தியாவில் தயாரிப்போம்', 'தற்சார்பு இந்தியா' மூலம் உருவாக்கப்பட்ட தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
2.சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான இன்று முன்னாள் உறுப்பினர்கள் மறைவு குறித்து இரங்கல் தீர்மானங்கள்:
இரா. துரைக்கண்ணு (மறைந்த வேளாண் அமைச்சர்), எஸ்.பி. பாலசுப்பிரமணியம் (பிரபல பின்னணி பாடகர்), மருத்துவர் வி. சாந்தா மறைவு (புற்றுநோய் வல்லுநர்) ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானங்கள் வாசிக்கப்பட உள்ளன.
3.வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் சார்பில் குடியரசு நாளன்று நடத்தப்பட்ட டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக, ஓய்வுபெற்ற விசாரணைக் குழு அமைக்க உத்தரவிடக் கோரி தாக்கல்செய்யப்பட்ட பல்வேறு மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.
4) நடிகர் சிலம்பரசனின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று மாநாடு படத்தின் டீசர் வெளியிடப்பட உள்ளது. மதியம் 2.34 மணிக்கு பாலிவுட் இயக்குநரும் நடிகருமான அனுராக் காஷ்யப், மலையாள நடிகர் பிரித்விராஜ், கன்னட நடிகர் சுதீப் ஆகியோர் படத்தின் டீசரை வெளியிட உள்ளார்கள். சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இப்படத்தை இயக்கியுள்ளார்.
5.ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் இன்றைய லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் மும்பை சிட்டி எஃப்சி ஆகிய அணிகள் மோதுகின்றன.
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி