திமுகவின் கறுப்புக்கொடி போராட்டம்:
கரோனா சூழலில் அதிமுக அரசாங்கம் சரியாக செயல்படவில்லை என சுட்டிக்காட்டிய திமுக தலைவர் முக ஸ்டாலின், தனது தொண்டர்களையும் பொதுமக்களையும் கறுப்புக்கொடி போராட்டத்தின் இன்று பங்கேற்க அழைத்துள்ளார். பொதுமக்கள் தங்கள் இல்லங்களில் கறுப்புக்கொடியை பறக்கவிட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். போராட்டத்தில் ஈடுபடக் கூடிய தொண்டர்கள், முகக்கவசம் அணிந்து தனி நபர் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். அதன்படி இன்று இப்போராட்டம் நடைபெறவுள்ளது.
Realme X2 விற்பனை ஆரம்பம்:
Realme X2 விற்பனை ஆரம்பம் 8 ஜிபி ரேம், 256 ஜிபி சேமிப்பு வசதிகொண்ட Realme X2 ஸ்மார்ட்போன் இன்று முதல் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது.
அமர்நாத் யாத்திரை தொடக்கம்:
இன்று முதல் புகழ்பெற்ற அமர்நாத் யாத்திரை தொடங்கவுள்ளது. கரோனா பரவல் காரணமாக முழு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது எனவும், ஒரு நாளைக்கு 500 யாத்ரீகர்களுக்கு மட்டுமே அங்குள்ள குகைக்கு செல்ல அனுமதி என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் மின்சாரம் துண்டிப்பு:
பரமாரிப்பு பணி காரணமாக சென்னையின் சில இடங்களில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
இன்று லாரிகள் ஓடாது - தமிழக லாரி உரிமையாளர்கள் அறிவிப்பு
டீசல் விலை உயர்வு, செயல்பாட்டில் இல்லாத சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பது உள்பட லாரி தொழிலை பாதிக்கும் விஷயங்களை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் இன்று லாரிகள் ஓடாது என தமிழக லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.
தியாகிகள் நாள் - மேற்கு வங்க முதல்வரின் வீடியோ கான்பரன்சிங் பேரணி
1993ஆம் ஆண்டு மேற்கு வங்க மாநிலத்தின் காங்கிரஸ் இளைஞரணி தலைவராக மம்தா பானர்ஜி இருந்தபோது, கம்யூனிஸ்டுகள் ஆட்சியில் இந்திய தேசிய காங்கிரஸ்காரர்கள் மீது காவல்துறையினர் இதே நாளில் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். அவர்களை நினைவுகூரும் விதமாக காங்கிரஸ், திரினாமுல் காங்கிரஸ் சார்பாக பேரணி நடத்துவது வழக்கம். கரோனா சூழல் காரணமாக இது வீடியோ கான்பரன்சிங் மூலம் நடத்தப்படும் என மேற்க வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.