- கரோனா குறித்து ஆய்வு - மத்தியக் குழுவினர் சென்னை வருகை
தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று பரவல் குறித்து ஆய்வு செய்ய ஐந்து பேர் கொண்ட மத்தியக் குழுவினர் மூன்று நாள் பயணமாக சென்னைக்கு இன்று வருகின்றனர்.
மத்தியக் குழுவினர் சென்னை வருகை - உணவகங்கள், தங்கும் விடுதிகள் திறப்பு:
மகாராஷ்டிரா மாநிலத்தில் பாதுகாக்கப்பட்ட பகுதி தவிர, ஏனைய இடங்களில் 33 விழுக்காடு இருக்கைகளுடன் உணவகங்கள் திறக்கப்படவுள்ளன.
உணவகங்கள், தங்கும் விடுதிகள் திறப்பு - மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு:
மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநரின் கோரிக்கைகளை ஏற்று, பல்வேறு துறைகளிலும் உள்ள மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்களின் உடல் குறைபாட்டையும், பாதுகாப்பையும் கருத்தில்கொண்டு, ஜூலை 1 முதல் 15 வரையிலான நாட்களுக்கு அரசுப் பணியாளர்கள் அலுவலகப் பணி மேற்கொள்வதில் இருந்து விலக்கு அளித்து தமிழ்நாடு அரசு ஆணைப் பிறப்பித்துள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு - சமூக இடைவெளியை கடைப்பிடிக்க ஐரிஸ் கருவி பொருத்தம்:
தமிழ்நாட்டில் முதல் முறையாக திருமழிசை காய்கறிச் சந்தையில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க ஐரிஸ் என்ற புதிய கருவி பொருத்தப்பட்டுள்ளது. 25 மீட்டர் வரை கண்காணிக்கும் இந்த ஐரிஸ் கருவி, இரண்டரை மீட்டர் இடைவெளி இல்லையென்றால், அதனை நினைவூட்ட அலாரம் அடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க ஐரிஸ் கருவி பொருத்தம் - சின்னத்திரை படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம்:
சின்னத்திரை படப்பிடிப்புகள் இன்று முதல் மீண்டும் தொடங்குகிறது. படப்பிடிப்பில் உரிய வரைமுறைகள் கடைப்பிடிக்கப்படவில்லை என்றால் கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.
சின்னத்திரை படப்பிடிப்புகள் மீண்டும் தொடக்கம் - செளரவ் கங்குலி புகைப்படம் பொறித்த மாஸ்க் விநியோகம்:
பிசிசிஐ தலைவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான செளரவ் கங்குலி இன்று தனது 48ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதையடுத்து கொல்கத்தாவைச் சேர்ந்த அவரது ரசிகர்கள் கிளப் கங்குலியின் படம் பொறித்த முகக்கவசங்களை பொதுமக்களுக்கு இன்று வழங்க இருக்கின்றனர்.
செளரவ் கங்குலி புகைப்படம் பொறித்த மாஸ்க் விநியோகம்