சென்னை: நங்கநல்லூர் பர்மா தமிழ் காலனியைச் சேர்ந்தவர் இசை (21). இவர் செல்போன் உதிரிபாகும் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று (செப்.03) மாலை நங்கநல்லூர் ரகுபதி நகர் முனீஸ்வரன் கோயில் அருகில் இசை நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு அவருக்கு தெரிந்த நங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்கிற திருட்டு ராஜி என்பவர் சென்று இசையிடம் தனக்கு உடனடியாக பணம் வேண்டும் என கேட்டுள்ளார்.
இதற்கு இசை தன்னிடம் தற்போது பணம் இல்லையென தெரிவித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ராஜசேகர் இசையின் கன்னத்தில் அறைந்து விட்டு கையில் வைத்திருந்த செல்போன் மற்றும் பர்சில் வைத்திருந்த 500 ரூபாயை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இதுகுறித்து பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் இசை புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் காவல் துறையினர், ராஜசேகர் என்ற திருட்டு ராஜி (25) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு, வழிப்பறி, செல்போன் பறிப்பு உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
மேலும், இவர் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூய்மைப் பணியாளரை தாக்கிய வழக்கறிஞர்:சென்னை ஜேஜே நகர் டிஎஸ் கிருஷ்ணா நகரில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. அந்தப் பள்ளியின் தூய்மைப் பணியாளராக முகப்பேர் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த 50 வயதுடையவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த மாதம் 21 ஆம் தேதி மாலை பள்ளியில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வருபவர், 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளை செல்போனில் வீடியோ எடுத்ததாகவும், தவறாக தொட்டதாகவும் அவர்களின் பெற்றோர்களிடம் மாணவிகள் தெரிவித்துள்ளனர்.
இதனை அந்தப் பள்ளியில் படித்து வரும் மாணவியின் பெற்றோர் ஒருவர் நேரடியாக பள்ளிக்குச் சென்று தூய்மைப் பணியாளரிடம் இது குறித்து கேட்டுள்ளார். அப்பொழுது தூய்மைப் பணியாளருக்கும், மாணவியின் தந்தைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த மாணவியின் தந்தை, தூய்மைப் பணியாளரை கன்னத்தில் அறைந்துள்ளார்.
பின்னர் இது குறித்து பாதிக்கப்பட்டவர் தனியார் பள்ளியின் முதல்வரிடம் தெறிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் ஜேஜே நகர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், இதுவரை பள்ளியில் பயிலும் மாணவிகளின் பெற்றோர்கள் தரப்பில் இருந்து எந்த புகாரும் காவல் நிலையத்திற்கு வரவில்லை என காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு:சென்னை கேகே நகர் ராணி அண்ணா நகரைச் சேர்ந்தவர் வசந்தி (47). இவர் அதே பகுதியில் தனது குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று (செப்.03) மதியம் தனது வீட்டில் உள்ள கிரைண்டரில் மாவு அரைத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கி வசந்தி கீழே விழுந்தார்.