சென்னை மாவட்டம், மதுரவாயலை சேர்ந்தவர் கார்த்தி (24). எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ரேணுகா (20) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.
கார்த்தி அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதனை ரேணுகா கண்டித்து வந்தார். இந்நிலையில் நேற்று(டிச.19) இரவு வழக்கம் போல் கார்த்தி மது அருந்திவிட்டு வந்ததால் ரேணுகா அவரை கண்டித்தார். அதனைத்தொடர்ந்து, இன்று (டிச.20) காலை ரேணுகாவை சமாதானப்படுத்துவதற்காக வானகரம் மீன் மார்க்கெட்டிற்கு சென்ற கார்த்தி, மீன் வாங்கி கொண்டு வீட்டிற்கு வந்தார். அப்போது கதவு உள்பக்கமாக சாத்தப்பட்டு இருந்தது. இதனால் அவர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ரேணுகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.