தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதலமைச்சரைச் சந்தித்து வாழ்த்து பெற்ற புதிதாக நியமிக்கப்பட்ட கழக நிர்வாகிகள்! - admk appoints new office bearers

சென்னை: சமீபத்தில் அதிமுக அமைப்புச் செயலாளர்களாக நியமிக்கப்பட்ட திண்டுக்கல் சீனிவாசன், ஆசைமணி ஆகியோரும், மயிலாடுதுறை மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்ட செந்தில்நாதனும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

newly appointed office-bearers met CM Palaniswami
newly appointed office-bearers met CM Palaniswami

By

Published : Jul 28, 2020, 6:55 AM IST

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் அதிமுக நிர்வாக ரீதியாக கட்சியில் சில மாற்றங்களைச் செய்துவருகிறது. அதன்படி, அமைப்பு ரீதியாக கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு, மத்திய என ஐந்து மாவட்டங்களாக மாநிலம் பிரிக்கப்பட்டு, அவற்றிற்கு மாவட்டச் செயலாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

செந்தில்நாதன்

அமைப்புச் செயலாளர்களாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ஆசைமணி, கருப்பசாமி பாண்டியன், இசக்கி சுப்பையா, ரத்தினவேல் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டனர். இதில் சீனிவாசன் திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல, புதிய மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டச் செயலாளராக செந்தில்நாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆசைமணி

இச்சூழலில், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள திண்டுக்கல் சீனிவாசன், ஆசைமணி, செந்தில்நாதன் ஆகிய மூவரும் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இதையும் படிங்க:அதிமுக நிர்வாகிகள் அதிரடி மாற்றம் - கொள்கை பரப்பு துணை செயலாளராக நடிகை விந்தியா நியமனம்!

ABOUT THE AUTHOR

...view details