கடந்த சனிக்கிழமை கட்சி அமைப்புகளிலும், கழக நிர்வாகத்திலும் சில மாற்றங்களை அறிவித்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். அதன்படி, கழக அமைப்புச் செயலாளராக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனும், திருப்பத்தூர் மாவட்டக் கழகச் செயலாளராக வணிகவரித் துறை அமைச்சர் வீரமணியும் நியமிக்கப்பட்டனர்.
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரைச் சந்தித்து வாழ்த்து பெற்ற கழக நிர்வாகிகள் - வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் வீரமணி
சென்னை: அதிமுகவில் புதியதாக நியமனம் செய்யப்பட்ட கழக நிர்வாகிகள், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
![அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரைச் சந்தித்து வாழ்த்து பெற்ற கழக நிர்வாகிகள் newly appointed admk party executive meets tn cm edapdani palanisamy](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-thumbnail-cm-2907newsroom-1596019188-488.jpg)
newly appointed admk party executive meets tn cm edapdani palanisamy
இந்நிலையில், இவர்கள் இருவரும் இன்று எடப்பாடி பழனிசாமியை சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள முதலமைச்சர் முகாம் அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.