தமிழ் நாட்டில் பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தொடர்ந்து காவலன் செயலியைக் குறித்து கல்லூரி மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் என அனைவரிடமும் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் ஒருபகுதியாக சென்னை மதுரவாயலில் உள்ள தனியார் கல்லூரியில் ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு காவலன் செயலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு செயலி எவ்வாறு பதிவிறக்கம் செய்து அதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பேசிய விஸ்வநாதன், "தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளில் காவல்துறை ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில் மற்றப் பெரு நகரங்களை ஒப்பிடுகையில் சென்னையில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைவாக உள்ளது. அதைவிட குற்றங்கள் நடைபெறாமல் இருக்கவேண்டும் என்பதே நமது குறிக்கோள்.
பெண்களுக்கு எங்கு ஆபத்துகள் ஏற்படுகிறது, யாரால் ஏற்படுகிறது போன்றவை பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் காவல்துறைக்கு தெரிவிக்கலாம். மேலும் காவலன் செயலியை மேம்படுத்த பெண்கள் தங்களது ஆலோசனைகளை வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் அச்செயலியை புதியதாக நான்கு லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்" எனத் தெரிவித்தார்.
காவலன் செயலி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் இதையும் படியுங்க:
காவலன் செயலி - 5 வினாடிகளில் ஆஜராகும் காவல்துறை!