தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாகன ஓட்டிகள் கவனம்: 2 பைக்குகளுக்கு மேல் வரிசையாக செல்லக்கூடாது - New Year

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு 2 பைக்குகளுக்கும் மேல் வரிசையாக பயணித்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டம்
புத்தாண்டு கொண்டாட்டம்

By

Published : Dec 31, 2022, 7:19 AM IST

Updated : Dec 31, 2022, 12:37 PM IST

சென்னை: புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுவருகிறது. அந்த வகையில் பைக்குகளில் கூட்டமாக செல்வதை தடுக்கும் நோக்குடன் 2 பைக்குகளுக்கும் மேல் வரிசையாக பயணித்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு 16 ஆயிரம் போலீசார் சென்னை மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

முக்கிய சாலைகளில் 300-க்கும் மேற்பட்ட தடுப்புகள் வைக்கப்பட்டு வாகன சோதனை நடத்தப்படுகிறது. பைக் ரேஸை தடுக்கும் விதமாக ஆங்காங்கே சாலையில் போலீசார் ரோந்து பணிகளை மேற்கொள்ள உள்ளனர். சென்னையில் உள்ள மேம்பாலங்கள் அனைத்தும் எட்டு மணிக்கு மேலாக மூடப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் புத்தாண்டு நாளில் பைக் ரேஸை முழுவதுமாக தடுக்கும் வகையில் இன்று (டிசம்பர் 31) மாலை 6 மணிக்கு மேல் இரண்டுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில், ஒன்றாக முக்கிய சாலைகளில் சென்றால் அவர்களுடைய இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று அதிரடி அறிவிப்பை சென்னை மாநகர போலீசார் வெளியிட்டுள்ளது. இதன் மூலமாக முக்கிய சாலைகளில் பைக் சாகசங்கள் மற்றும் ரேசில் ஈடுபடுவது தடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:QR Code-ஐ ஸ்கேன் செய்தால் கார் வரும் - போதையில் இருப்பவர்களுக்காக ஏற்பாடு

Last Updated : Dec 31, 2022, 12:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details