தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இப்படியும் வாழ்த்தலாமே.. ஷாட் அண்ட் ஸ்வீட் புத்தாண்டு வாழ்த்துகள்! - புத்தாண்டு 2024

2024 New Year Wishes In Tamil : 2024 புத்தாண்டில் அன்புக்குரியவர்களுக்கு பகிர டாப் 20 வாழ்த்துச் செய்திகளைக் காணலாம்.

2024 New Year Wishes In Tamil
2024 புத்தாண்டு வாழ்த்து மடல் தமிழில்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 31, 2023, 4:32 PM IST

சென்னை: 2023ஆம் ஆண்டின் கடைசி நாளில் உள்ள நாம், நாளைய விடியல் நல்லவையாக இருக்கட்டும் என்ற நம்பிக்கையோடு 2024ஆம் ஆண்டை வரவேற்க காத்திருக்கிறோம். 2023ஆம் ஆண்டு புயல், வெள்ளம், மழை, இழப்பு, சோகம் என பல்வேறு நினைவுகளை நமக்கு கொடுத்துள்ளது. அதேநேரத்தில், பலருக்கு இந்த ஆண்டு சாதனை, வெற்றி, புதிய வரவு என பல்வேறு மகிழ்ச்சியை கொடுத்திருக்கும் என்று நம்புகிறோம்.

இப்படி கலவையாக கொடுத்த இந்த 2023ஆம் ஆண்டு இன்றுடன் இனிதே நிறைவடையவுள்ளது. நாளை பிறக்கும் 2024ஆம் ஆண்டு, நல்லதொரு மாற்றத்தை அளிக்கும் என்ற நம்பிக்கையோடு வரவேற்போம். புத்தாண்டில் பலரும் தங்களது குறைகளை மாற்றிக் கொள்வதாக புதிய தீர்மானங்கள் எடுப்பது உண்டு. அதுமட்டுமின்றி, பொதுவாகவே புத்தாண்டு என்றால் சிறியவர்கள், இளைஞர்கள், முதியவர் என அனைவரும் புதிய ஆண்டுக்கான தங்களது அன்பை வாழ்த்துச் செய்திகள் மூலம் பகிர்ந்து கொள்வது உண்டு.

சிலர் வெளியிடங்களுக்குச் சென்று கோலாகலமாக கொண்டாடுவர். சிலர் வீட்டிலேயே கொண்டாடுவார்கள். குறிப்பாக இதில் அனைவருமே தங்களது நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் வாழ்த்துச் செய்தி அனுப்புவதை மட்டும் தவிர்க்க மாட்டார்கள். அப்படி அன்பான அந்த வாழ்த்துச் செய்திகளை பகிர்வதுடன் இனிதே இந்த 2024ஆம் ஆண்டு துவங்கட்டும்.

புத்தாண்டு வாழ்த்து மடல்கள்:

  1. இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
  2. புத்தாண்டில் இருள் நீங்கி புதிய ஒளி பிறக்கட்டும்
  3. பழைய விஷயங்களை மனதில் வைத்து குழப்பிக் கொள்ளாமல், தூக்கி எரிந்து விட்டு புதிய வாழ்க்கையை துவங்க இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
  4. இன்னல்கள் நீங்கி இனிமையான புத்தாண்டைத் துவங்க வாழ்த்துக்கள்
  5. புத்துணர்வுடன் 2024-இல் புதிய பயணத்தைத் துவங்க வாழ்த்துக்கள்
  6. 2023-இல் சந்தித்த பல இருள், சோதனை, கஷ்டம், இழப்பு அனைத்தும் நீங்கி 2024 இனிதான புத்தாண்டை துவங்க வாழ்த்துக்கள்
  7. உங்களது சோதனைகள் சாதனைகளாக மாற 2024ஆம் ஆண்டு உதவியாக இருக்க அன்பு வாழ்த்துக்கள்
  8. 2023-இல் சிங்கிளாக இருந்த இளைஞர்கள் 2024 கமிட்டாக வாழ்த்துக்கள்
  9. கல்யாணத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் 90ஸ் கிட்ஸ்களுக்கு 2024ல் திருமணமாக வாழ்த்துக்கள்
  10. முன்கோபக்காரர் கோபத்தைக் குறைத்து குடும்பத்துடன் இனிமையான வாழ்க்கையைத் தொடர வாழ்த்துக்கள்
  11. வெல்லம் போல் இனிமையான மகிழ்ச்சி வெள்ளமாக இன்பம் பெருகி வர புத்தாண்டு வாழ்த்துக்கள்
  12. புன்னகையோடு புத்தாண்டை எதிர்நோக்கி காத்திருக்கும் அனைவருக்கும் புதிய ஒளி பிறக்க வாழ்த்துக்கள்
  13. மகிழ்ச்சி, செல்வம், நல்ல உடல் ஆரோக்கியம் கிடைக்க உங்களுக்கும் ,உங்கள் குடும்பத்துக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
  14. 2024இல் சிரிப்பாலும், அன்பாலும், வெற்றியாலும் நிறைய அன்புக்குரியவர்களுக்கு அன்பான புத்தாண்டு வாழ்த்துக்கள்
  15. கனவுகள் நிறைவேற 2024 சாதகமாக அமைந்து வெற்றிக்கனியை பெற புத்தாண்டு வாழ்த்துக்கள்
  16. 2024ஆம் ஆண்டின் நாட்காட்டியை திருப்பும்போது, உங்களது வாழ்க்கையில் அன்பு, மகிழ்ச்சி, செழிப்பு ஆகியவற்றால் அலங்கரிக்க வாழ்த்துக்கள்
  17. முன்னோக்கிச் செல்லும் பாதையில் உள்ள சவால்களை வெற்று வெற்றி வாகை சூடும் ஆண்டாக 2024 திகழ வாழ்த்துக்கள்
  18. 2024ஆம் ஆண்டின் 365 நாட்களும் மகிழ்ச்சியும், நன்மையும் வந்தடைய வாழ்த்துக்கள்
  19. இந்த புத்தாண்டு அன்பு, அரவணைப்பு, அமைதி கலந்த தருணங்களை தரும் வருடமாக அமைய வாழ்த்துக்கள்
  20. புத்தாண்டில் பிரகாசிக்க, வாழ்க்கையில் வால் நட்சத்திரம்போல் மிளிர இதயம் கலந்த வாழ்த்துக்கள்

இதையும் படிங்க: 2024 புத்தாண்டை வரவேற்க ரெடியாகும் தமிழ்நாடு மக்கள்..! போலீசார் பாதுகாப்பு தீவிரம்..

ABOUT THE AUTHOR

...view details