சென்னை: புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அனைத்து மாநிலங்களிலும் மாவட்டங்களிலும் காவல்துறையின் பாதுகாப்பு சிறப்பாக செய்யப்பட்டிருந்தது என தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் நேற்று (டிச.31) இரவு முதல் இன்று (ஜன.1) காலை வரை புத்தாண்டு கொண்டாடப்பட்டது. எந்தவித அசம்பாவித சம்பவங்களும் விபத்துகளும் இல்லாமல் சிறப்பாக நடந்து முடிந்தது என கூறியுள்ளார்.
மாநகர காவல் ஆணையர்களுக்கும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட அனைத்து காவலர்கள் மற்றும் ஊர் காவல் படையினருக்கும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒத்துழைப்பு வழங்கிய பொதுமக்களுக்கு காவல்துறையின் மனமார்ந்த நன்றி எனவும் அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு போராடிய இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் வாபஸ்