தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாநகரின் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்யும் திட்டங்கள் நிறைவு - new water project in chennai gets finished

சென்னை: மாநகரின் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 126.39 கோடி ரூபாயில் கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி, முகலிவாக்கம் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்த குடிநீர் திட்டங்களின் பணிகள் நிறைவடைந்துள்ளன.

water
water

By

Published : May 29, 2020, 11:32 PM IST

சென்னை மாநகரப் பகுதிகளில் குடிநீர் தேவைகளை நிறைவு செய்ய குடிநீர் வாரியம் பல்வேறு திட்டப்பணிகளை செயல்படுத்தி வந்தது.

இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மாநகரின் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 126.39 கோடி ரூபாயில் கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி, முகலிவாக்கம் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்த குடிநீர் திட்டங்களின் பணி வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது.

மேற்படி திட்டங்களினால் 1.6 லட்சம் மக்கள் தங்களின் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள முடியும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details