சென்னை:திங்க் ஸ்டுடியோ மற்றும் தீ ஷோ பீப்பில் நிறுவனங்கள் இணைந்து வழங்கும், இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில், நடிகர் ஆர்யா நடிக்கும் படம் “கேப்டன்”.
டெடி' என்ற பிரமாண்டமான படத்திற்குப் பிறகு ஆர்யா இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் ஜோடி மீண்டும் இணைந்து செயல்படுவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இப்படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா லட்சுமி, ஹரீஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி, உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு டி.இமான் இசை அமைத்துள்ளார்.