கரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் இதுவரை 12 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர். மேலும் வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு மருத்துவ வசதி அளித்துவரும் செவிலியர்களுக்கு உதவும் புதிய கருவியை சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்தினர் தயார் செய்துள்ளனர். மேலும், இக்கருவியை வடிவமைத்த விக்னேஷ்வரன் கூறும்போது, மருத்துவப் பணியில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் செவிலியர்கள், மருத்துவர்கள் தங்கள் பணிகளை செய்து வருகின்றனர்.
இதுபோன்ற இக்கட்டான சூழல்களில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடமிருந்து செவிலியர்களுக்கு முடிந்த அளவில் பாதுகாப்பு அவசியமானதாகும். அவ்வப்போது நோயாளிகளின் நலனில் முன்னேற்றம் உள்ளதா? என தெரிந்து கொள்ள நோயாளிகளின் அறைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில், இக்கருவியை பயன்படுத்தலாம்.