தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழகத்திற்கு தனி கல்விக்கொள்கை! - குழு அமைத்தது அரசு - மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு அரசின் புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க சான்றோர்கள் மற்றும் வல்லுநர்கள் அடங்கிய மாநில அளவிலான குழுவின் பட்டியலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க சான்றோர்கள் மற்றும் வல்லுநர்கள் அடங்கிய மாநில அளவிலான குழு அமைப்பு
தமிழ்நாடு அரசின் புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க சான்றோர்கள் மற்றும் வல்லுநர்கள் அடங்கிய மாநில அளவிலான குழு அமைப்பு

By

Published : Apr 5, 2022, 4:23 PM IST

Updated : Apr 5, 2022, 5:22 PM IST

சென்னை:கடந்த 2021-22ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், 'தமிழ்நாட்டின் வரலாற்று மரபு, தற்போதைய நிலைமை, எதிர்காலக்குறிக்கோள்களுக்கு ஏற்ப, மாநிலத்திற்கெனத் தனித்துவமான மாநிலக்கல்விக் கொள்கை ஒன்றை வகுப்பதற்கு, கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களைக் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்றை இந்த அரசு அமைக்கும்' என அறிவிக்கப்பட்டிருந்தது.

புதிய கல்விக்கொள்கையை வடிவமைக்க சான்றோர்கள் குழு: அந்த அறிவிப்பைச் செயல்படுத்தும்விதமாக, தமிழ்நாட்டில் புதிய கல்விக்கொள்கையை வடிவமைப்பது குறித்து ஆய்வு செய்திட, பின்வரும் சான்றோர்கள் அடங்கிய குழுவினை அமைத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இக்குழுவின் தலைவராக மாண்பமை டெல்லி உயர்நீதிமன்ற மேனாள் தலைமை நீதியரசர் த.முருகேசன் அவர்களும்;
உறுப்பினர்களாக பேராசிரியர் திரு. எல். ஜவஹர்நேசன், முன்னாள் துணைவேந்தர், சவீதா பல்கலைக்கழகம்;
திரு. இராமானுஜம், ஓய்வுபெற்ற கணினி அறிவியல் பேராசிரியர், தேசிய கணித அறிவியல் நிறுவனம்;
பேராசிரியர் திரு. சுல்தான் இஸ்மாயில், மாநிலத் திட்டக்குழு உறுப்பினர்;
பேராசிரியர் திரு. இராம சீனுவாசன், மாநிலத் திட்டக்குழு உறுப்பினர்;
முனைவர் அருணா ரத்னம், மேனாள் சிறப்புக்கல்வி அலுவலர், யூனிசெப் நிறுவனம்;
திரு.எஸ்.ராமகிருஷ்ணன், எழுத்தாளர்;
திரு விஸ்வநாதன் ஆனந்த், உலக சதுரங்க சாம்பியன்.
திரு.டி.எம்.கிருஷ்ணா, இசைக்கலைஞர்;
திரு.துளசிதாஸ், கல்வியாளர்;
முனைவர் திரு.ச.மாடசாமி, கல்வியியல் எழுத்தாளர்;
திரு.இரா.பாலு, தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கிச்சான்குப்பம், நாகப்பட்டினம் மாவட்டம்;
திருமதி.ஜெயஸ்ரீ தாமோதரன், அகரம் அறக்கட்டளை ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இக்குழுவானது புதிய கல்விக்கொள்கையை வடிவமைத்து, ஓராண்டு காலத்திற்குள் தனது பரிந்துரையை அரசுக்கு அளிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பினாமி பரிவர்த்தனை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தொடர்பான வழக்கு: உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Last Updated : Apr 5, 2022, 5:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details