தமிழ்நாடு அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் சார்பில், 'தமிழ் அகராதியியல் நாள்' தொடக்க விழா சென்னை எழும்பூரில் நடபெற்றது. இந்த விழாவில் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், பாண்டியராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.
தமிழில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 ஆயிரம் தமிழ்ச் சொற்களை, தமிழ் அகராதியில் சேர்ப்பதற்கான குறுந்தகட்டை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட அமைச்சர் ஜெயக்குமார் அதனைப் பெற்றுக்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், 'தமிழ் மொழியில் புதியதாக 9 ஆயிரம் சொற்கள் கண்டறியப்பட்டன. அந்த சொற்கள் சொற்குவைத்திட்டத்தில் சேர்க்கப்பட உள்ளது. தமிழ் வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. புதிதாக கண்டறியப்பட்ட சொற்கள் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மடிக்கணினியிலும் இணைக்கப்பட உள்ளது’ என்று தெரிவித்தார்.
தமிழ்ப் புதிய சொற்கள் வெளியீடு நிகழ்ச்சி மேலும், தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் அரசாணைகள் முழுவதுமாக தமிழ் வழியில் வெளியாவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்; இது குறித்து ஏற்கெனவே முதலமைச்சர் தெளிவாக கூறியுள்ளதாகவும், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 20 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்படும் என்ற அரசாணையும் முழுமையாக அமல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.
இதையும் படிங்க: மாஃபா மன்னிப்பு கேட்கும்வரை போராட்டம் - திமுக