சென்னை:தமிழ்நாட்டில் கரோனா நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசாணை எண்.75, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நாள் 15-02-2022இன் படி, ஒரு சில கட்டுப்பாட்டு நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.
ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தின் அறிவிக்கை எண்:40-3/2020/DM-I(A), நாள் 25-02-2022-இல் கரோனா நோய்த்தொற்றைக்கட்டுப்படுத்தத் தேவையான கட்டுப்பாடுகள் மற்றும் பொருளாதாரம் தொடர்பான தளர்வுகள் உட்பட இதர தளர்வுகளை அறிவிக்க அபாயமதிப்பீடு அடிப்படையிலான அணுகுமுறையினை (Risk Assessment Based Approach) கடைபிடிக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்புவதற்காகத் தளர்வுகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்பேரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் காரணமாக கரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதைக்கருத்தில் கொண்டும், மக்களின் இயல்பு வாழ்க்கை முழுமையாகத் திரும்புவதற்கு ஏதுவாகவும், இதுவரை நடைமுறையிலிருந்து வந்த சமுதாய, கலாசார மற்றும் அரசியல் கூட்டங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை 3-3-2022 முதல் நீக்கப்படுகிறது.
மேலும், தொற்றுப் பரவலைக் கட்டுக்குள் வைத்திட, 3-3-2022 முதல் 31-3-2022 வரை கீழ்க்கண்ட செயல்பாடுகள் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படுகிறது.