தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் நாளை முதல் புதிய தளர்வுகள்! - சென்னை அண்மைச் செய்திகள்

தமிழ்நாட்டில் திரையரங்குகள், பேருந்து பயணம் ஆகியவற்றில் அறிவிக்கப்பட்ட தளர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது.

தமிழ்நாட்டில் நாளை முதல் புதிய தளர்வுகள் அறிவித்து உத்தரவு!
தமிழ்நாட்டில் நாளை முதல் புதிய தளர்வுகள் அறிவித்து உத்தரவு!

By

Published : Oct 31, 2021, 3:50 PM IST

Updated : Oct 31, 2021, 4:05 PM IST

தமிழ்நாட்டில் கரோனா தொற்று குறைந்து வருவதால் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்படுகின்றன. இந்நிலையில் ஏற்கனவே நவம்பர்1ஆம் தேதி முதல் புதிய தளர்வுகளை அறிவித்து அரசு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி திரையரங்குகள், பேருந்து பயணம் உள்ளிட்டவற்றில் 100 விழுக்காடு இருக்கைக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மேலும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

எனினும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நவம்பர் 15 வரை அமலில் இருக்கும் எனவும் அரசு அறிவித்துள்ளது. இந்த உத்தரவு நாளை முதல் அமலுக்கு வருகிறது.

இதையும் படிங்க:குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழ்நாட்டுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

Last Updated : Oct 31, 2021, 4:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details