சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் சி.குமரப்பன், சென்னை முதன்மை தொழிலாளர் நீதிமன்ற நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக புதுச்சேரி முதன்மை நீதிபதி பி. தனபால், சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற விஜிலென்ஸ் பதிவாளர் பூர்ணிமா, மாநிலப் போக்குவரத்து மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் தலைவராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, விஜிலென்ஸ் பிரிவில் கூடுதல் பதிவாளர் சாய் சரவணன், விஜிலென்ஸ் பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உயர் நீதிமன்ற நீதித்துறை பதிவாளர் ஜோதிராமன், நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டு, நாகப்பட்டினம் மாவட்ட முதன்மை நீதிபதி செந்தில்குமார் நீதித்துறை பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.