சென்னை:இது தொடர்பாக தமிழ்நாடு அரசு இன்று (அக்.25) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கணவனால் நிராதரவாகக் கைவிடப்பட்டு அல்லது திருமண வாழ்வு முறிவுற்றுத் தனியாக வசிக்கும் பெண்களின் பெயர், கணவனின் குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள காரணத்தாலும், நீதிமன்ற விவாகரத்துச் சான்று இல்லாத காரணத்தினாலும் சம்பந்தப்பட்ட பெண்களுக்கு குடும்ப அட்டை வழங்கப்படாமல் உள்ளது.
அத்தகைய பெண்களின் உணவுப் பாதுகாப்பு பாதிக்கப்படுவதாக அரசின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.
இதையடுத்து, கணவனால் கைவிடப்பட்டு தனியாக வசிக்கும் பெண்கள் புதிய குடும்ப அட்டைக் கோரும்போது சட்டபூர்வமான நீதிமன்ற விவாகரத்துச் சான்று போன்ற ஆவணங்கள் ஏதும் சமர்ப்பிக்க வலியுறுத்தாமல் புதிய குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அலுவலர்களுக்கு தமிழ்நாடு அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இந்து முன்னணி எதிர்ப்பை மீறி 'பெரியாரும் இஸ்லாமும்' நிகழ்ச்சி நடத்த மனோன்மணியம் பல்கலை., முடிவு