தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதுகலை பயிலாமல் பிஎச்டி படிப்புகளில் சேரும் வகையில் புதிய திட்டம் - பல்கலைக்கழக மானியக் குழுவின் புதிய திட்டம்

நான்கு ஆண்டு இளநிலை படிப்புகளில் சேர்ந்தால் முதுகலை பயிலாமல் பிஎச்டி படிப்புகளில் சேரும் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த பல்கலைக்கழக மானியக் குழு திட்டமிட்டுள்ளது.

PhD courses without postgraduate study  University Grants Commission  announcement of University Grants Commission  முதுகலை பயிலாமல் பிஎச்டி படிப்புகளில் சேரும் வகையில் புதிய திட்டம்  முதுகலை இல்லாமல் பிஎச்டி  பல்கலைக்கழக மானியக் குழு  பல்கலைக்கழக மானியக் குழுவின் புதிய திட்டம்  பல்கலைக்கழக மானியக் குழு அறிவிப்பு
phd

By

Published : Mar 17, 2022, 12:17 PM IST

சென்னை:மத்திய அரசு தேசிய புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதிய திட்டங்களை பல்கலைக்கழக மானியக்குழு அறிமுகப்படுத்தவுள்ளது.

அதாவது, 4 ஆண்டுகால இளநிலை படிப்பை படித்தால், முதுகலை பயிலாமல் நேரடியாக பிஎச்டி சேர முடியும். ஏற்கனவே அமலில் உள்ள 3 ஆண்டுகால இளநிலை படிப்புகளுடன், விருப்பத்தேர்வாக 4 ஆண்டுகால முதுகலை படிப்பும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

4 ஆண்டுகால படிப்பை விருப்பத்தின் பேரில் நேரடியாகவும், ஆன்லைன் வழியிலும், தொலைதூரக்கல்வி வழியிலும் பயில முடியும். 4 ஆண்டுகால படிப்பில் சேரும் ஒருவர், எப்போது விரும்பினாலும் பாதியில் படிப்பிலிருந்து வெளியேறி மீண்டும் எந்த உயர்கல்வி நிறுவனத்திலும் படிப்பை தொடரலாம்.

ஏற்கனவே நேரடியாக கல்லூரிகளுக்கு செல்லாமல் ஆன்-லைன் வழியில் மாணவர்கள் பட்டப் படிப்புகளை படிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த பல்கலைக்கழக மானியக்குழு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அரசு பள்ளி, அரசு மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்பட வேண்டும் - தெலுங்கானா ஆளுநர் தமிழிசை

ABOUT THE AUTHOR

...view details