சென்னை: இன்றைய சட்டப்பேரவை மானியக்கோரிக்கை விவாதம் முன்னதாக நடைபெற்ற வினாக்கள் விடைநேரத்தின்போது பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினர் இ.கருணாநிதி தனது தொகுதிக்கு உட்பட்ட அஸ்தினாபுரம் பகுதியில் துணை மின் நிலையம் அமைக்க அரசு முன்வருமா என கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, "தாம்பரம் கோட்டத்தைப் பொறுத்தவரை 6 லட்சத்து 65 ஆயிரம் மின் இணைப்புப் பயன்பாட்டில் உள்ளது.
பல்லாவரத்தில் புதிய மின்கோட்டம்: அமைச்சர் - மின்சார துறை
பல்லாவரத்தில் புதிய மின்கோட்டம் தொடங்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
பல்லாவரத்தில் புதிய மின்கோட்டம்: அமைச்சர்
இந்த கோட்டம் அதிக மின் இணைப்புள்ள பெரிய மின் கோட்டமாக உள்ளது. அதனை இரண்டாக பிரித்து பல்லாவரத்தில் புதிய கோட்டம் உருவாக்க வேண்டுமென முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. விரைவில் பல்லாவரம் புதிய மின் கோட்டம் தொடங்கப்படும்", என்றார்.
இதையும் படிங்க:கோரத்தாண்டவமாடும் கோடை வெயில் - தெலங்கானாவில் ஒரேநாளில் 6 பேர் உயிரிழப்பு