தமிழ்நாட்டிலுள்ள வீடு, விளை நிலங்கள் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் சார்பதிவாளர் அலுவலங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்யப்படுகிறது. இந்தப் பதிவு முடிந்தவுடன் பட்டா பெயர் மாற்றுவதற்கான படிவத்தை வருவாய்த் துறைக்கு அனுப்ப வேண்டும். அவ்வாறு அனுப்பப்படும் படிவத்திற்கு ஒப்புகைச் சீட்டு பொதுமக்களிடம் அளிக்கப்படும்.
இதனை வைத்து தாலுகா அலுவலகம் மூலம் பட்டா பெயர் மாறுதல் செய்யலாம். ஆனால், இந்த முறையில் பல்வேறு குளறுபடிகள் நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. எனவே, இனிவரும் காலங்களில் சார்பதிவாளர் அலுவலகங்களிலிருந்து ஒரே சர்வே எண்களின் சொத்துக்கள் இருந்தால் பத்திரம் பதிவு செய்தவுடன், தானாக பட்டா மாறுதல் செய்யப்படும்.