சென்னை: ”புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 2021 திட்டத்தின் கீழ் விபத்தினால் ஏற்படும் அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு, அங்கீகரிக்கப்படாத மருத்துவமனைகளிலும் சிகிச்சை மேற்கொள்ள வழி வகை செய்யப்பட்டுள்ளது.
மேலும் 203 வகையான சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சை நடைமுறைகள் மேற்கொள்வதற்கு தமிழ்நாடு, புதுச்சேரி, திருவனந்தபுரம், பெங்களூரு மற்றும் புது டெல்லி ஆகிய இடங்களில் உள்ள 1,169 அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் கட்டணமில்லா மருத்துவ சிகிச்சைகள் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.