தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை உயர்நீதிமன்றம் - நான்கு புதிய நீதிபதிகள் பதவியேற்பு! - madras high court

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நான்கு கூடுதல் நீதிபதிகள் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

நான்கு புதிய நீதிபதிகள்
நான்கு புதிய நீதிபதிகள்

By

Published : Oct 20, 2021, 7:19 PM IST

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய கூடுதல் நீதிபதிகளாக சுந்தரம் ஸ்ரீமதி, பரத சக்கரவர்த்தி, விஜயகுமார் மற்றும் முகமது ஷபீக் ஆகியோரை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த நான்கு புதிய கூடுதல் நீதிபதிகளுக்கும் தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி இன்று (அக்.20) பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

பின்னர் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல் ராஜ் மற்றும் பல்வேறு வழக்கறிஞர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் புதிய நீதிபதிகளை வரவேற்று பேசினர். வரவேற்புக்கு பதிலளித்து புதிய நீதிபதிகள் உரையாற்றினர்.

புதிய நான்கு நீதிபதிகளுடன் சேர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளது. 16 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன.

நீதிபதி சுந்தரம் ஸ்ரீமதி

32 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றிய அனுபவம் உடையவர். அரசு சிறப்பு வழக்கறிஞராகவும், மத்திய அரசு, அரசுடமையாக்கப்பட்ட வங்கிகள், மத்திய பணியாளர் தேர்வாணையம் ஆகியவற்றின் வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார்.

நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி

வந்தவாசி அருகே உள்ள தென்னாத்தூரில் பிறந்தவர். திண்டிவனத்தில் பள்ளிப் படிப்பையும், புதுச்சேரி அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பையும் முடித்து 28 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றிய அனுபவமிக்கவர். 2018 ஆம் ஆண்டு புதுச்சேரி அரசின் வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார்.

நீதிபதி ஆர்.விஜயகுமார்

இவரின் தந்தை ஏ. ராமமூர்த்தி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியவர். 23 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றி அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிப கழக வழக்கறிஞராக பணியாற்றியவர்.

நீதிபதி முகமது ஷபீக்

சென்னை மண்ணடியில் பிறந்தவர். இவரது தந்தை எஸ்.எம்.அப்துல்காதர் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றியவர். சென்னையில் பள்ளிப்படிப்பு மற்றும் சட்டப்படிப்பை முடித்தவர். 27 அண்டுகால அனுபவத்தில் நாட்டில் உள்ள 10 உயர் நீதிமன்றங்களிலும், வரி தொடர்பான தீர்ப்பாயங்களிலும் பணியாற்றி உள்ளார்.

2018 ஆம் ஆண்டு அரசு சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டபோது, அரசின் வரி தொடர்பான வழக்குகளை நடத்தியது மட்டுமல்லாமல் ஜி.எஸ்.டி. சட்டத்தை அமல்படுத்துவதிலும் பங்களிப்பை அளித்தவர்.

இதையும் படிங்க: உயர் அலுவலர்கள் கொலை செய்ய சொன்னால் கொன்றுவிடுவீர்களா...? - எஸ்.பியிடம் உயர் நீதிமன்றம் காட்டம்

ABOUT THE AUTHOR

...view details