தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

லட்சுமணன் ரேகையை யார் மீறினாலும் நடவடிக்கை - அண்ணாமலை புது விளக்கம்! - சூர்யா சிவா பாஜக ஓபிசி அணி

திருச்சி சூர்யா தொலைபேசி உரையாடல் விவகாரம் தொடர்பாக, 'கட்சியின் வளர்ச்சியின்போது, லட்சுமண ரேகை தாண்டுபவர்கள் மீது தலைவர் என்கிற ரீதியில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Nov 23, 2022, 5:26 PM IST

சென்னை:தேனாம்பேட்டையில் புதியதாக தொடங்கப்பட உள்ள தனியார் டீக்கடையின் 200ஆவது கிளையினை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (நவ.23) திறந்து வைத்தபின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முகப்பேரில் இந்த கடையில் மூன்றாவது கிளையை திறந்து வைத்த நிலையில், தற்போது 200ஆவது கிளையினை திறந்து வைத்துள்ளேன்.

சிறு, குறு தொழில் செய்யக்கூடியவர்கள் முன்னேற வேண்டும் என்பது மத்திய அரசின் நிலைப்பாடு. இதுபோன்று, சிறிய தொழில்களை ஆரம்பித்து லட்சக்கணக்கான வேலைவாய்ப்பு வழங்கவேண்டும். ஒரு கடை ஆரம்பிப்பது மூலம் நான்கு பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுகிறது. வருகிற 2025-ல், 5 ட்ரில்லியன் டாலரை கட்டவேண்டும் என மிகப்பெரிய இலக்கை நோக்கி மத்திய அரசு பயணித்து வருகிறது.

தவறு செய்தால் நடவடிக்கை: திமுகவினர் எப்படி பெண்களை நடத்துகிறார்கள் என்பது தெரியும். கட்சியில் இரண்டு நபர்கள் தனிப்பட்ட முறையில் கருத்து வேறுபாடு குறித்துப்பேசி இருக்கிறார்கள். முதல் கட்டமாக, விசாரணை கமிட்டி நாளை திருப்பூரில் இரு தரப்பையும் அழைத்து விசாரிக்க உள்ளது. இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாரையும் விடப்போவதில்லை. நாணயத்தில் இரண்டு பக்கமும் உள்ளதுபோல், நாளை இதுகுறித்து இரண்டு தரப்பினரிடமும் விசாரணை நடைபெறும். தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த உரையாடலை தனிப்பட்ட பேச்சுவார்த்தை என்று கருத முடியாது.

சஸ்பெண்ட் - பதிலளிக்க முடியாது:கட்சியின் வளர்ச்சி நடவடிக்கைகளுக்காக லட்சுமண ரேகை தாண்டக்கூடியவர்கள் மீது தலைவர் என்கிற ரீதியில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் காயத்ரி ரகுராம் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது. பாஜக என்ற பேருந்தில் தவறு செய்பவர்கள், சரியாக செயல்படாதவர்கள் பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்டு, புதியதாக பயணம் செய்ய விரும்புவர்கள் பேருந்தில் அழைத்துச்செல்லப்படுவர். தமிழ்நாட்டில் பாஜக வளர்ச்சிக்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என எனக்குப் பணி ஒதுக்கப்பட்டுள்ளது.

வியூகங்கள் வகுக்கப்படும்: தேசிய ஜனநாயக கூட்டணியினை பொறுத்தவரை, அதிமுக அதில் பெரிய கட்சியாக தமிழ்நாட்டில் திகழ்கிறது. மேலும், கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பாக அதற்கான ஒரு சிஸ்டம் செயல்முறை வியூகங்கள் வகுக்கப்பட வேண்டிய நிலை உள்ளது. தற்போது கூட்டணிக்கான பேச்சுவார்த்தை பேசுவதற்குப் போதிய கால அவகாசம் இருக்கிறது.

டிடிவி தினகரன், பாஜகவோட கூட்டணி அமைக்க விருப்பம் தெரிவித்துள்ள நிலையில்; இது குறித்து வரும் நாட்களில் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக அதற்கான சில நடைமுறைகளும் செயல் திட்டங்களும் இருக்கின்றன. அதற்கான காலமும் இருப்பதால் தற்போது அது குறித்து தெரிவிக்கமுடியாது.

லட்சுமணன் ரேகையை யார் மீறினாலும் நடவடிக்கை - அண்ணாமலை புது விளக்கம்!

கட்சியின் வளர்ச்சிக்குத் தடைகளாக இருக்கக்கூடியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் கட்சியில் எத்தனை ஆண்டு காலம் இருந்தார்கள் என்பதை எல்லாம் கருத்தில் கொள்ள முடியாது. தேவைப்படின், பாஜக என்ற பேருந்தில் மாநிலத் தலைவராக இருக்கக்கூடிய நான் கூட மாற்றப்படலாம். அது கட்சியின் வளர்ச்சிக்கான செயல்பாடாகத் தான் இருக்கும்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: "பாஜகவில் துரோகிகளுக்கு இடமில்லை" - காயத்ரியை சீண்டிய அமர் பிரசாத் ரெட்டி

ABOUT THE AUTHOR

...view details