சென்னை: கரோனா தொற்றின் இரண்டாம் அலை குறைந்துவரும் நிலையில், உலகம் முழுவதும் மெள்ள மெள்ள இயல்புநிலை திரும்பிவந்தது. இதனிடையே கரோனா உருமாற்றம் அடைந்து டெல்டா, டெல்டா பிளஸ், ஒமைக்ரான் என்று உலக நாடுகளை அச்சுறுத்திவருகிறது.
இதனிடையே தமிழ்நாட்டில் ஒமைக்ரான் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும், பொதுவெளியில் முகக்கவசம் அணிவதோடு, தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒமைக்ரான் பரவலைத் தடுக்கும் வகையில் பள்ளி, கல்லூரிகளில் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
அதில், "மாணவர்கள் தங்கும் விடுதிகளில் சாப்பிடும்போது சில்வர் தட்டிற்குப் பதிலாக, ஒருமுறை பயன்படுத்தப்படும் வாழை மட்டையாலான தட்டுகளைப் பயன்படுத்த வேண்டும். வகுப்பறைகளில் குளிர்சாதன கருவிகளைப் பயன்படுத்தக் கூடாது. கூட்டம் சேரும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதைக் கல்லூரிகள் தவிர்க்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:நைஜீரியாவிருந்து சென்னை வந்தவருக்கு ஒமைக்ரான்