சென்னை:திரைத்துறையில் நடிகர்களாக வலம் வரும் ஒவ்வொருவரும் தங்கள் முதல்படத்திலேயே நாயகர்களாக அறிமுகமானவர்களா என்றால் அது சந்தேகன் தான். ஏனெனில், திரையுலகில் சிறு வேடங்கள் தொடங்கி நடிப்பாலும், உழைப்பாலும், மக்கள் மனதில் இடம் பிடித்து பின்னர் நாயகர்களாக மாரியவர் பட்டியலே அதிகம். அந்த வகையில், நடிகர் கவின் தனியார் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி 2 மற்றும் பிக் பாஸ் சீசன் 3 மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.
இவர் திரைத்துறையில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து, அதனை தொடர்ந்து தனது நடிப்பால் ஹீரோவாக உயர்ந்தார். அப்படி அவர் கதாநாயகனாக நடித்த லிஃப்ட் திரைப்படம் 2021-ல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து, இந்த ஆண்டு (2023) வெளியான டாடா திரைப்படம் எளிமையான கதை வடிவில் காமெடி, சென்ட்டிமென்ட் என அனைத்தும் கலந்து சிறந்த நடிப்பில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இந்நிலையில் தற்போது ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத் இசை மற்றும் நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில், நடிகர் கவின் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.
தமிழ் சினிமாவில் மாறுபட்ட படைப்புகளை வழங்கி, தொடர் ப்ளாக் பஸ்டர் வெற்றிகளைக் குவித்து வரும் நிறுவனம் ரோமியோ பிக்சர்ஸ். இந்நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தை நடன இயக்குநர் சதீஷ் இயக்குகிறார். டான்ஸராக திரைத்துறைக்குள் நுழைந்து, நடன இயக்குநராக வளர்ந்து நடிகராகவும் வலம் வரும் சதீஷ் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
இதையும் படிங்க:மாமன்னன் படத்தின் 2 ஆவது சிங்கிள் 'ரெக்கே' வெளியாகும் தேதி அறிவிப்பு!