தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 26, 2020, 6:36 PM IST

ETV Bharat / state

1300 படுக்கைகளுடன் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கரோனா சிகிச்சை மையம்

சென்னை : அண்ணா பல்கலைக்கழக கட்டடத்தை சிகிச்சை மையமாகப் பயன்படுத்திக் கொள்ள பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி அளித்த நிலையில், அங்கு நடைபெற்று வரும் பணிகளை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பார்வையிட்டார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக சிகிச்சை மையத்தை பார்வையிட்ட மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
சென்னை அண்ணா பல்கலைக்கழக சிகிச்சை மையத்தை பார்வையிட்ட மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் அதிகரித்து வரும் நிலையில், கரோனா சிகிச்சை மையங்களின் தேவையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அந்த வகையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் விடுதியை கரோனா சிகிச்சை மையமாக பயன்படுத்த மாநகராட்சி நிர்வாகம் கோரி இருந்தது. இந்நிலையில், விடுதி கட்டடத்துக்கு மாற்றாக மற்றுமொரு புதிய கட்டடத்தை சிகிச்சை மையமாகப் பயன்படுத்திக்கொள்ள பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி அளித்தது.

இதைத் தொடர்ந்து அங்கு 1300 படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையம் அமைப்பதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இப்பணிகளை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உள்ளிட்ட அலுவலர்கள் இன்று (ஜூன் 26) பார்வையிட்டனர்.

முன்னதாக, இந்த சிகிச்சை மையம் ஒரு வாரத்திற்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என ஆணையர் பிரகாஷ் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :போலி இ-பாஸூடன் பயணித்த 37 பிகார்வாசிகளை தடுத்து நிறுத்திய காவல் துறையினர்!

ABOUT THE AUTHOR

...view details