தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதிய கரோனா நோயாளிகளுக்கு அனுமதி இல்லை - சித்த மருத்துவர் வீரபாபு

சென்னை: சித்த மருத்துவப் பிரிவில் நாளை முதல் புதிய கரோனா நோயாளிகள்  அனுமதிக்கப்படமாட்டார்கள் என சித்த மருத்துவர் வீரபாபு தெரிவித்தார்.

வீரபாபு
வீரபாபு

By

Published : Sep 15, 2020, 2:04 PM IST

சென்னை சாலிகிராமத்தில் அரசு சித்த மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் நாளை முதல் உள் நோயாளிகளுக்கு அனுமதி கிடையாது என சித்த மருத்துவர் வீரபாபு தெரிவித்துள்ளார்.

இது குறித்து சித்த மருத்துவர் வீரபாபு கூறுகையில், ஜவகர் பொறியியல் கல்லூரியில் ஜூன் 3ஆம் தேதி சித்த மருத்துவ சிகிச்சை தொடங்கப்பட்டது. இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்ட ஐந்து ஆயிரத்து 400 நோயாளிகள் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளித்துள்ளோம்.

சித்த மருத்துவத்தின் மூலம் ஐந்து ஆயிரத்து 200 நோயாளிகள் குணமடைந்து வீட்டுக்கு சென்றுள்ளனர். மேலும் தற்போது 200 நோயாளிகள் சிகிச்சை அளித்து வருகிறோம்.

அவர்கள் குணமடைய ஆறு நாள்கள் தேவைப்படும். அதன் பின்னர் ஜவஹர் பொறியியல் கல்லூரியில் செயல்பட்டுவரும் சித்தமருத்துவ பிரிவினை மூடுவதற்கு திட்டமிட்டுள்ளோம்.

எனவே சித்த மருத்துவ பிரிவில் நாளை (செப்.16) முதல் புதிதாக கரோனா வைரஸ் பாதித்த உள்நோயாளிகள் சேர்க்கப்படமாட்டார்கள். தொடர்ந்து ஐந்து மாதமாக சித்த மருத்துவ பணிகள் பணிபுரிந்தால் தனக்கு ஓய்வு தேவை என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளேன். மாநகராட்சியுடன் இணைந்து செயல்பட்ட சித்த மருத்துவ பிரிவில் இருந்து வெளியேறுகிறேன்.
ஆனாலும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு தொடர்ந்து சித்த மருத்துவத்தில் கரோனாவிற்கு சிகிச்சை அளிப்பேன்” எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details