தமிழ்நாட்டில் மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதன்படி இன்று (ஜனவரி 3) மட்டும் 1,728 பேருக்கு தொற்று பதிவாகியுள்ளது. குறிப்பாக சென்னையில் 876 நபர்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் சென்னையில் ஒமைக்ரான் தொற்றும் வேகமாகப் பரவிவரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்த மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
அதன் ஒரு பகுதியாக சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கரோனா பாதித்தவர்களுக்கு முதற்கட்ட உடல் பரிசோதனை செய்வதற்காக 15 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.