தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவொற்றியூரில் புதிய பேருந்துகள் சேவை தொடக்கம்; எம்.எல்.ஏவுக்கு பாராட்டு - Praise to MLA KP Shankar

மக்கள் கோரிக்கையை ஏற்று திருவொற்றியூரில் இருந்து கோவளத்திற்கு புதிய பேருந்துகள் இயங்க காரணமாக அமைந்த சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி சங்கரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

எம்.எல்.ஏவுக்கு பாராட்டு
எம்.எல்.ஏவுக்கு பாராட்டு

By

Published : Jul 4, 2021, 8:50 PM IST

சென்னை: திருவொற்றியூரில் இருந்து கோவளம் செல்ல புதிய பேருந்துகள் வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை திருவெற்றியூர் தொகுதி எம்எல்ஏ கே.பி சங்கர் அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றார்.


மாநகர போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குநர் அன்பு ஆபிரகாம் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். இதையடுத்து முதலமைச்சர் ஸ்டாலின், போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் ஆகியோர் உத்தரவுப்படி, திருவொற்றியூரில் புதிய பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டது. புதிய பேருந்துகளை இயக்கும் நிகழ்ச்சி இன்று காலை (ஜூலை 4) திருவொற்றியூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

புதிய பேருந்துகள் இயக்கம் தொடக்கம்

வடசென்னை மக்களவைத் தொகுதி உறுப்பினர் டாக்டர். கலாநிதி வீராசாமி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கேபி.சங்கர், ஐ ட்ரீம்ஸ் மூர்த்தி, ஜெ.ஜெ.எபினேசர் ஆகியோர் பச்சைக் கொடி காட்டி புதிய பேருந்துகள் சேவையை தொடங்கிவைத்தனர்.

மேலும் 109டி என்ற எண் கொண்ட புதிய பேருந்து, திருவொற்றியூரில் இருந்து 8 முறையும், கோவளத்தில் இருந்து 8 முறையும் செயல்படும் என தெரிகிறது. இதனால் கிழக்கு கடற்கரை சாலைக்கு செல்லும் பொதுமக்கள், மீனவர்கள் பயன்பெறுவர்.

புதிய பேருந்துகள் கோரிக்கையை அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று நிறைவேற்றி கொடுத்த சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.சங்கரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க:சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு

ABOUT THE AUTHOR

...view details