தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பட்ஜெட் கூட்டத்தொடரில் பத்திரப்பதிவு குறித்து புதிய மசோதா - அமைச்சர் மூர்த்தி தகவல்!

போலி பத்திரங்கள் மற்றும் தவறான பத்திரப்பதிவுகள் மீது பதிவுத்துறை அலுவலர்களே நடவடிக்கை எடுக்கலாம் என்ற சட்டத்திருத்த மசோதா வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட இருப்பதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

பத்திரப்பதிவுத்துறை
பத்திரப்பதிவுத்துறை

By

Published : Jul 7, 2021, 6:16 PM IST

சென்னை:தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி 'கரோனா பெருந்தொற்றுக் காலத்தில், இந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் மட்டும் 2 லட்சத்து 30 ஆயிரத்து 792 பத்திரப்பதிவுகள் நடைப்பெற்றுள்ளன. கடந்தாண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு அதிக அளவில் பத்திரபதிவுகள் நடைப்பெற்றுள்ளன.

பத்திரபதிவு செய்வதற்கு பொதுமக்கள் இடைத்தரகர்களை நம்பி ஏமாற்றம் அடைய வேண்டாம். இடைத்தரகர்களை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆன்லைனில் பத்திரபதிவு மேற்கொள்ள வழிவகை செய்யும் 'ஸ்டார் 2.0' திட்டம் ஏற்கனவே அனைத்து பதிவாளர் அலுவலங்களிலும் நடைமுறையில் உள்ள நிலையில், பணிகள் துரிதப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான பணிகள் நிறைவு பெறும்.

போலி பத்திரங்கள் மற்றும் தவறாக பதிவு செய்யப்பட்டுள்ள பத்திரப்பதிவுகள் மீது பதிவுத்துறை உயர் அலுவலர்களே நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டத்திருத்த மசோதா வரும் பட்ஜெட்டில் தாக்கல் செய்யப்பட உள்ளது" என தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஒளிப்பரப்பு சட்ட திருத்த வரைவுக்கு ரஜினி எதிர்ப்புக் குரல் கொடுக்க வேண்டும்- தங்கர் பச்சான்

ABOUT THE AUTHOR

...view details