தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நவ.13-ல் புதிய காற்றழுத்தம் உருவாக வாய்ப்பு? - இந்திய வானிலை ஆய்வு மையம்

நவ.13ல் புதிய காற்றழுத்தம் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நவ.13-ல் புதிய காற்றழுத்தம் உருவாக வாய்ப்பு?
நவ.13-ல் புதிய காற்றழுத்தம் உருவாக வாய்ப்பு?

By

Published : Nov 10, 2021, 12:16 PM IST

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது.

இந்நிலையில் நவ.13ல் புதிய காற்றழுத்தம் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தெற்கு அந்தமானையொட்டிய பகுதியில் வரும் 13ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என்றும், அது தீவிரமடைந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வங்கக் கடலில் உள்ள காற்றழுத்தம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக நிலைகொண்டுள்ளது.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் ரெட் அலெர்ட்: தீவிர வெள்ளத்தடுப்பு நடவடிக்கையில் ஐஏஎஸ் அலுவலர் அமுதா;ஆய்வு செய்த அமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details