தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களுக்கு அதிவேக இணைய இணைப்பை வழங்க ரூ.184 கோடி முதலீடு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்புகள் பின்வருமாறு.
*சோழிங்கநல்லூர் எல்கோசெஸ்- இல் உலகத்தரம் வாய்ந்த பசுமைப் பூங்கா ரூ 20 கோடி செலவினத்தில் அமைத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
* எல்காட் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், பசுமை தகவல் தொழில்நுட்ப பூங்காக்களாக சர்வதேச தரத்தில் மாற்ற ரூபாய் 40 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
* அசைவூட்டப் படம், காட்சி வெளிப்பாடு, வேடிக்கையான விளையாட்டு மற்றும் விரிவாக்கப்பட்ட மெய்நிகர் கொள்கையை தமிழ்நாடு அரசு வெளியிடும்.
* இடைமுக பயன்பாட்டு நிரலி நுழைவாயில் மூலம் பொது மக்களுக்கு அரசின் சேவைகளை உயர்ந்த தரத்துடன் விரைவாக வழங்க வழிவகை செய்யப்படும்.
* தமிழ்நாடு நலத்திட்ட பயனாளிகளுக்கான நேரடி பயன் பரிமாற்ற தளம் உருவாக்கப்படும்.
* தமிழ்நாடு இணையவழி அரசு சேவைகளுக்கான ஒற்றை நுழைவுத்தளம் ரூபாய் 11 கோடி செலவில் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையும் வருவாய் பங்கிட்டிலியிருந்து செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.