சென்னையில், இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்தும், முகத்தை மூடியபடியும் பயணித்த இரண்டு நபர்கள், சாலையில் நடந்து சென்ற ஒருவரிடம் செல்போனை பறித்துக்கொண்டு தப்பிக்க முயன்றனர்.
அப்போது அந்தச் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்த மாதாவரம் உதவி ஆய்வாளர் ஆண்ட்லின், அந்நபர் திருடன் திருடன் என கூச்சலிட்டதைக் கேட்டு செல்போனை பறித்துக்கொண்டு தப்பியோடிய கொள்ளையர்களை, துரத்திச் சென்று பிடிக்க முயன்றார்.
ஆனால் இதனை மீறியும் கொள்ளையர்கள் தப்பிக்க முயன்றதால், வாகனத்தை விட்டு கீழே இறங்கிய காவலர் கொள்ளையரின் சட்டையை பிடித்து இழுத்து கீழே தள்ளி, கொள்ளையர்களில் ஒருவரை கைது செய்தார். மற்றொருவர் தப்பிச்சென்றுவிட்டார்.
வழக்கின் விசாரணையில் தலைமறைவாக இருந்த கொள்ளையனின் கூட்டாளிகள் மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர். சினிமா பாணியில் ரமேஷ் செல்போன் பறிப்பு கொள்ளையனை துரத்திச் சென்று கைது செய்த சம்பவத்தின் சிசிடிவி காட்சியை ட்விட்டரில் பகிர்ந்துள்ள சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால், ரமேஷை வெகுவாக பாராட்டியுள்ளார்.
இந்த ட்விட்டர் பதிவில் , " இந்த வீடியோ எந்த படத்திலும் வரும் சினிமா காட்சிகள் அல்ல. நிஜ ஹீரோ உதவி ஆய்வாளர் ஆண்ட்லின் ரமேஷ் திருட்டு இருசக்கர வாகனத்தில் சென்ற செல்போன் பறிப்பு திருடர்களை கைது செய்த காட்சிகள்" என்று கூறியுள்ளார். சமூக வலைதளத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வரும் இந்த வீடியோ, பலரது பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க:கார் லோன் பெற்று ரூ. 3 கோடி மோசடி - 3 பேர் கைது