தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மேயர் பத்தி பேசியதை ஏற்கனவே டிவில போட்டுட்டான்; அமைச்சர் நேரு கலகல பேச்சு

சென்னை மேயர் குறித்து தான் பேசியதை ஏற்கனவே தொலைக்காட்சிகளில் செய்தியாக வந்துள்ளதாக அமைச்சர் நேரு நகைச்சுவையுடன் தெரிவித்தார்.

மேயர் பத்தி ஏற்கனவே பேசி தான் டிவில போட்டுட்டான்; அமைச்சர் நேரு கலகல பேச்சு
மேயர் பத்தி ஏற்கனவே பேசி தான் டிவில போட்டுட்டான்; அமைச்சர் நேரு கலகல பேச்சு

By

Published : Sep 21, 2022, 9:33 AM IST

Updated : Sep 21, 2022, 10:14 AM IST

சென்னை : பள்ளிகளுக்கான இலச்சினை(லோகோ) மற்றும் குறும்படம் வெளியிடுதல் நிகழ்ச்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் நடைபெற்றது. அமைச்சர்கள் கே.என் நேரு, மா சுப்பிரமணியன், சேகர் பாபு உள்ளிட்டோர் இலச்சினை, குறும்படத்தை இணைந்து வெளியிட்டு ஆசிரியர் தினத்தையொட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

நிகழ்ச்சியில் மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், ஆணையர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

சென்னை மேயர் பிரியா,’’மாணவரின் வாழ்க்கையில் ஒவ்வொரு ஆசிரியரும் ரோல் மாடலாக இருப்பார். சென்னை மாநகராட்சி பள்ளிகளிலும் தனியார் பள்ளிகளுக்கு நிகராக கல்வி வழங்குகிறோம் என்ற நோக்கில் இலச்சினை மற்றும் குறும்படம் வெளியிட்டுள்ளோம் என கூறினார்.

தலைமை பொறுப்பு, முடிவு எடுத்தல் உள்ளிட்டவற்றை மாணவர்களிடம் வளர்க்க பள்ளிகளில் மாணவர்கள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளனர். முதலமைச்சர் எண்ணங்களை வண்ணம் ஆக்கும் வகையில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் சிறந்த திட்டங்கள் கொண்டு வரப்படும்" என்றார்.

மேயர் பத்தி ஏற்கனவே பேசி தான் டிவில போட்டுட்டான்; அமைச்சர் நேரு கலகல பேச்சு

அமைச்சர் மா சுப்ரமணியன்,’’பள்ளிகளுக்கு விடுமுறை கொடுங்கள் என 10 க்கும் மேற்பட்ட அரசியல் கட்சி தலைவர்கள் அறிக்கை மூலம் வலியுறுத்துகிறார்கள்.3 நாட்களில் சரி ஆகிவிடும் காய்ச்சல் காரணமாக எப்படி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க முடியும்.

குழந்தைகளை காப்பாற்ற வேண்டிய அவசியம் வந்தால் முதலில் அரசு தான் நிற்கும். பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய நிலை இல்லை. மேலும் தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டு பதற்ற நிலையை உருவாக்க வேண்டாம்" என்றார்.

அமைச்சர் கே.என் நேரு பேச்சை தொடங்கினார். அப்போது ’ மேயர் பெயரை விட்டுவிட்டதாக அமைச்சர் சேகர் பாபு கூறினார். அதற்கு அமைச்சர் நேரு, வந்ததில் இருந்து நீ ஒரு மாதிரி தான் இருக்க. மேயர் பத்தி ஏற்கனவே பேசினேன். அதனை டிவி ல போட்டுட்டான். மேயரை நான் முதலிலேயே வரவேற்று விட்டேன் என்றார்.

ஆசிரியர்களுக்கு போட்டி வைப்பது போல தமிழ்நாடு அமைச்சர்களுக்குள் பெரிய போட்டி நடைபெற்று வருகிறது. அமைச்சர் சேகர்பாபு தமிழ்நாடு முழுவதிலும் உள்ள கோவில்களில் எல்லாம் ஆய்வு நடத்துகிறார். சுகாதார துறை அமைச்சரின் பணியை க்ணட வியப்படைந்தது உண்டு.

சேகர் பாபு எவ்வளவு சாமி கும்பிட்டாலும் மா.சுப்பிரமணியன் என்ன ஊசி போட்டாலும் மாநகராட்சி நல்லா வேலை செய்தால் தான் மீண்டும் அமைச்சர் ஆக முடியும் என பழமொழி கூறி கிண்டல் செய்தார்.

119 தொடக்கப்பள்ளி 92 நடுநிலை பள்ளிகள் 38 உயர்நிலை என மொத்தம் 281 பள்ளிகளில் ஒரு லட்சத்து நான்காயிரதத்து 743 மாணவர்கள் படித்து வருகின்றனர். சென்னை மாநகராட்சி பள்ளி ஏழை எளிய நடுத்தர மக்களின் குழந்தைகளுக்கு உதவிகரமாக உள்ளது. ஆசிரியர்கள் மாணவர்களை நன்கு தயார் செய்யுங்கள், உங்களுக்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் நாங்கள் தயார் செய்து தருகிறோம்.

மாநகராட்சிக்கு கலை அறிவியல், பொறியியல் மருத்துவ கல்லூரி வேண்டும் என அதற்கான முயற்சிகள் எடுத்து வருகிறோம். தென் சென்னையில் மருத்துவக்கல்லூரி அமைக்க திட்டமிட்டு வருகிறோம். அதற்கு முதல்வர் இசைவு தெரிவித்துள்ளார். மாநகராட்சியில் 50 ஆயிரம் ஊழியர்கள் உள்ளனர். அவர்களின் பிள்ளைகள் படிப்பதற்கு மாநகராட்சி கல்லூரியில் 32% இடஒதுக்கீடு கிடைக்கும். அதன் மூலம் மாநகராட்சி மேலும் உத்வேகத்துடன் செயல்படும்.

மாநகராட்சி ஆசிரியர்கள் சிறப்பாக பணியாற்றுங்கள், உங்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு சட்டப்படி உரிய முறையில் மாநகராட்சி செய்து தரும். சென்னை மாநகராட்சி மற்ற மாநகராட்சிக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும். முன்னோடி மாநிலமான மஹாராஷ்டிரா மாநகராட்சிக்கு இணையாக நாம் செயல்பட வேண்டும். அரசிற்கு இணையாக ஒரு தனி அரசாங்கம் போல் மாநகராட்சி செயல்படுகிறது. அதனை மேலும் சிறப்புடன் செயல்பட அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

சென்னையில் மழைநீர் வடிகால் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக தோண்டப்பட்டுள்ள குழிகளை பருவமழைக்குள் மூட வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்" என அமைச்சர் நேரு தெரிவித்தார்.

இதையும் படிங்க:நான் ஏன் மன்னிப்புக்கேட்க வேண்டும்? - விமர்சனம் செய்தவர்களுக்கு ஆ. ராசா சரமாரி கேள்வி

Last Updated : Sep 21, 2022, 10:14 AM IST

ABOUT THE AUTHOR

...view details