தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செல்வராகவனின் 'நெஞ்சம் மறப்பதில்லை' வெளியாக இடைக்கால தடை - செல்வராகவனின் ரசிகர்களின் 'நெஞ்சம் மறப்பதில்லை'

சென்னை: செல்வராகவன் ரசிகர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும் வகையில், தனது பிறந்தநாளான மார்ச் 5ஆம் தேதி 'நெஞ்சம் மறப்பதில்லை' படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்திருந்தார். இந்நிலையில், படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெஞ்சம் மறப்பதில்லை
நெஞ்சம் மறப்பதில்லை

By

Published : Mar 2, 2021, 4:27 PM IST

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்ஜே சூர்யா நடிப்பில் வருகிற மார்ச் 5ஆம் தேதி வெளியாக உள்ள நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படத்திற்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி ரேடியன்ஸ் மீடியா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், என்னை நோக்கி பாயும் தோட்டா படத்திற்காக எஸ்கேப் ஆர்டிஸ்ட் தயாரிப்பு நிறுவனம் தங்களிடம் 2 கோடியே 42 லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாகவும், படத்தை வெளியிடுவதற்கு முன்னால் ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் கடனை கொடுத்து விட்டதாகவும், மீதமுள்ள ஒரு கோடியே 24 லட்சம் ரூபாயை திருப்பிக் கொடுக்காமல் நெஞ்சம் மறப்பதில்லை படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் தயாரிப்பு நிறுவனம் வெளியிட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்களைக் குஷிப்படுத்தும் செல்வராகவனின் 'நெஞ்சம் மறப்பதில்லை'
மேலும், தங்கள் நிறுவனத்திற்கு தர வேண்டிய மீதமுள்ள தொகையை வட்டியுடன் செலுத்தும் வரை நெஞ்சம் மறப்பதில்லை படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆசை, நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.


செல்வராகவனின் 'நெஞ்சம் மறப்பதில்லை'

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா, ரெஜினா, நந்திதா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் 'நெஞ்சம் மறப்பதில்லை'. திகில் பாணியில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் தயாரிப்புப் பணிகள் அனைத்தும் முடிந்து 2017 ஜூன் 30ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

செல்வராகவனின் 'நெஞ்சம் மறப்பதில்லை'

ஆனால், அதே ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி விதிப்பு அமலுக்கு வந்ததால், கேளிக்கை வரி குறித்து சிக்கல் எழுந்த நிலையில், படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இதன் பின்னர் படம் குறித்த எந்தத் தகவலும் வெளிவராமல் இருந்தது. இத்திரைப்படத்தில் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா பணியாற்றியதால் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.

செல்வராகவனின் ரசிகர்களின் 'நெஞ்சம் மறப்பதில்லை'

இந்தச் சூழலில் ரசிகர்களைக் குஷிப்படுத்தும் விதமாக, செல்வராகவன் ரசிகர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும் வகையில், தனது பிறந்தநாளான மார்ச் 5ஆம் தேதி 'நெஞ்சம் மறப்பதில்லை' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என செல்வா அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பால் ரசிகர்கள் குஷியில் இருந்தனர்.

இந்நிலையில், பட தயாரிப்பு நிறுவனத்திற்கு இடையேயான பிரச்னையினால் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details