தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அருந்ததிராய் கட்டுரை நீக்கப்பட்ட விவகாரம்: துணைவேந்தர் விளக்கம் - Tirunelveli news in tamil

வழக்கமாக மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பாடத்திட்டம் மாற்றப்படுவது வழக்கம் என்றும் அந்த வகையில்தான் 2017ஆம் ஆண்டு சேர்க்கப்பட்ட அருந்ததி ராய் கட்டுரை நீக்கப்பட்டு புதிய கட்டுரை சேர்க்கப்பட்டுள்ளது என துணைவேந்தர் பிச்சுமணி விளக்கம் அளித்துள்ளார்.

vc clarification on arundhati roy book issue
அருந்ததிராய் கட்டுரை நீக்கப்பட்ட விவகாரம்: துணைவேந்தர் பிச்சுமணியின் விளக்கம்

By

Published : Nov 13, 2020, 4:54 PM IST

திருநெல்வேலி: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதுகலை ஆங்கிலப் படிப்பில் மூன்றாம் பருவ பாடத்திட்டத்தில் 2017ஆம் ஆண்டுமுதல் இருந்த அருந்ததிராய் எழுதிய வாக்கிங் வித் காம்ரேட்ஸ் என்ற கட்டுரை அண்மையில் நீக்கப்பட்டது.

இது ஏபிவிபி அமைப்பு தந்த அழுத்தத்தால் எடுக்கப்பட்ட முடிவு எனப் பலரும் விமர்சித்துவந்தனர். மேலும், சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

பல்கலைக்கழக விதிப்படி பாடத்திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் அதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாடத்திட்டக் குழு, சிண்டிகேட் கமிட்டியிடம் உரிய அனுமதி பெற வேண்டும். ஆனால், துணைவேந்தர் பிச்சுமணி, பாடத்திட்டக் குழு, சிண்டிகேட் கமிட்டியிடம் ஆலோசனை செய்யாமல் தன்னிச்சையாக டீன்ஸ் கமிட்டி ஒன்றை உருவாக்கி அருந்திராய் கட்டுரையை நீக்க முடிவுசெய்துள்ளார்.

இது இந்தியாவின் இதயத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் என்றும் உடனடியாக அருந்ததிராய் கட்டுரையை மீண்டும் சேர்க்க வேண்டும் என்றும் கல்வியாளர்கள், ஜனநாயக ஆர்வலர்கள் வலியுறுத்தினர். இந்த விவகாரம் தொடர்பாக துணைவேந்தர் பிச்சுமணியை நாம் தொடர்புகொண்டு கேட்டபோது, "வழக்கமாக மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்படும்.

அந்த வகையில்தான் முதுகலைப் படிப்பில் மூன்றாம் பருவ பாடத்திட்டம் மாற்றப்பட்டது. இதில், வேறு எந்த அரசியல் காரணமும் இல்லை. உயர் கல்வித் துறை எங்களிடம் இதுதொடர்பாக எவ்வித விளக்கமும் கேட்கவில்லை. மாறாக பல்கலைக்கழகங்களிடம் இதுபோன்று பாடத்திட்டங்களில் மாற்றம் கொண்டுவரும்போது முறைப்படி உயர் கல்வித் துறைக்கு விளக்கமளிக்க வேண்டும்.

அந்த வகையில் அருந்ததி ராய் எழுதிய கட்டுரை நீக்கப்பட்டு புதிய கட்டுரை சேர்க்கப்பட்டது தொடர்பாக தமிழ்நாடு உயர் கல்வித் துறையிடம் நேற்று முன்தினமே உரிய விளக்கம் அளித்துவிட்டோம். தனியாக உயர் கல்வித் துறை எங்களிடம் எந்த விளக்கமும் கேட்கவில்லை; எந்தக் கடிதமும் அனுப்பவில்லை" என்றார்.

இதையும் படிங்க:'அருந்ததி ராய் புத்தகத்தை நீக்கியதோடு இது நிற்கப்போவதில்லை'- எச்சரிக்கும் கனிமொழி!

ABOUT THE AUTHOR

...view details