சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து ஆகியோர் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசனை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் சந்தித்து கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின்பு சரத்குமார், ரவி பச்சமுத்து ஆகிய இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
'மக்கள் நீதி மய்யம் கட்சி உடனான தொகுதி பங்கீடு குறித்து நல்ல செய்தி வரும்' - TN Election2021 update
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி குறித்து நாளை (மார்ச்.7) மாலைக்குள் நல்ல செய்தி வரும் என்று இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர்(ஐஜேகே) ரவி பச்சமுத்து, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் ஆகியோர் கூட்டாகத் தெரிவித்தனர்.
mnm
அப்போது அவர்கள் கூறியதாவது, மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நல்ல முறையில் சென்று கொண்டிருக்கிறது. நாளை (மார்ச் 7) மாலைக்குள் அனைத்தும் இறுதி செய்யப்பட்டு நல்ல செய்தி வரும். தொகுதி பங்கீடு பற்றியும் குறித்து விரைவில் நல்ல செய்தி வரும் என்றனர்.