நடிகர்கள் ஜெய், ராய் லட்சுமி, கேத்தரின் தெரசா, வரலட்சுமி சரத்குமார் உள்பட பலர் நடித்துள்ள நீயா-2 திகில் திரைப்படம் கடந்த 24ஆம் தேதி வெளியானது. இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஜம்போ சினிமாஸ் நிறுவனத்தின் பங்குதாரர் ஸ்ரீதர், நடிகர் விஜய் சேதுபதி, நடிகை காயத்ரி ஆகியோர் நடிக்கும் 'மெல்லிசை' என்ற திரைப்படத்தை தயாரிப்பதற்காக பெற்ற கடன் தொகையில், ரூ.35 லட்சம் திருப்பி தராமல் நீயா-2 படத்தை தயாரித்து வெளியிட்டுள்ளதாகவும், அதனால் படத்தின் சாட்டிலைட் உரிமத்தை விற்பனை செய்ய தடை விதிக்கக்கோரி விஜய் கோத்தாரி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
'நீயா 2 படத்தின் சாட்டிலைட் உரிமையை விற்பனை செய்யக் கூடாது!' - நீதிமன்றம் உத்தரவு - வரலட்சுமி சரத்குமார்
சென்னை: "நடிகர் ஜெய் நடித்த நீயா-2 படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜூன் 12 ஆம் தேதி வரை விற்பனை செய்யக் கூடாது" என்று, சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
chennai HC
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீயா-2 படத்தின் சாட்டிலைட் உரிமம் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு விட்டதாக தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, படத்தின் சாட்டிலைட் உரிமம் விற்பனை செய்யப்பட்டு விட்டதா? இல்லையா? என்பது குறித்து ஜூன் 12ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய பட தயாரிப்பு நிறுவனத்துக்கு உத்தரவிட்ட நீதிபதி, அதுவரை நீயா -2 திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமம் விற்பனை செய்வதில் தற்போதைய நிலையே நீடிக்கவும் உத்தரவிட்டார்.