கடந்தாண்டு செப்டம்பர் மாதம் நீட் தேர்வு நடைபெற்று அதன் முடிவுகளும் வெளியிடப்பட்டன. ஆனால் கரோனா பெருந்தொற்று காரணமாக நீட் கலந்தாய்வு தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் கலந்தாய்வு வரும் ஜனவரி 19ஆம் தேதி தொடங்கப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.